Tag Archives: இலங்கை

இலங்கை முஸ்லீம்களுக்கு எதிரான படு பயங்கர கலவரம் வெறியாட்டம்

இலங்கையில் நடந்த கொடூரத்தை விவரிக்கும் செய்திகளை பல இணையதளங்கள் வெளியிட்டுள்ளன அதில் உங்கள் பார்வைக்கு: அளுத்கம மற்றும் தர்ஹா நகர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு  சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் புத்த அமைப்பு வெறியர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 பள்ளிவாசல்களில்   புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி இரத்த வெறியாட்டம் ஆடியுள்ளனர். அளுத்கம நகரில் நேற்று (15-6-2014) மாலை பொதுபல சேனாவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த …

மேலும் படிக்க

மனித உரிமை மீறல்: ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம்: இலங்கை

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படமாட்டாது என்று இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 26-வது கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசின்ஹா இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை ஆற்றிய தொடக்க உரையில், இறுதிக்கட்ட போரில் …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் – ராஜபக்சே உத்தரவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக அதிபர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்நாட்டு மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சிறைகளில் 98 தமிழக மீனவர்கள் இருப்பதாக, அந்நாட்டு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. நேற்று, இலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை …

மேலும் படிக்க

இலங்கை மீதான அமெரிக்கா கொண்டு வந்த ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக  அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்  ஜநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது. இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் …

மேலும் படிக்க

சானல் 4 தொலைக்காட்சியின் புதிய வீடியோ – இலங்கை இராணுவத்தின் அட்டூழியம்

”இலங்கைப் போரில் அருவருக்கத்தக்க மீறல்களுக்கான புதிய வீடியோ ஆதாரம்” என்னும் தலைபில் சானல் 4 தொலைக்காட்சி நேற்று ஞாயிறன்று வீடியோ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. கலம் மக்ரே அவர்களால் தயாரிக்கப்பட்ட, அந்த குறிப்புக்கான வீடியோ ஆதாரத்தை பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கியிருந்ததாக அந்தத் தொலைகாட்சி கூறியிருந்தது. பெண்  விடுதலைப்புலிகள் என்று நம்பப்படுபவர்களின் உடல்களை நோக்கி இலங்கை இராணுவத்தினர் சிலர் மிகவும் மோசமான செயல்களை செய்வதாகக் கூறி, சில காட்சிகளைக் …

மேலும் படிக்க

இலங்கையில் தரையிறங்கினார்களா சூப்பர் சிங்கர் பாடகர்கள்?

சூப்பர் சிங்கர்கள் இன்று அதிகாலை இலங்கையில் தரையிறங்கினார்கள் என இலங்கை இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் திவாகரின் நிலை இன்னமும் தெரியவில்லை ஆனால் அவரும் அங்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வருகிறது, அது உறுதிப்படுத்தப்படவில்லை. தமிழர்களை படுகொலை செய்த தேசத்தில் இவர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கு பெறும் சூப்பர் சிங்கருக்கு இலங்கையில் நடப்பது பற்றி கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு முழுமையான விபரம் வழங்கப்படமாலே இலங்கை அழைத்துச் சென்றனர் என்பதுடன் …

மேலும் படிக்க

இலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் இன்று நடைபெற இருந்த தமிழகத்தின் ‘சூப்பர் சிங்கர்’ இசை நிகழ்ச்சி இப்போது இரத்து செய்யப்பட்டது என்ற செய்தி வெளிவந்துள்ளது . இந்த நிகழ்ச்சியை கொழும்பில் ஏற்பாடு செய்த ‘கோரல் ப்ரோபெர்ட்டி’ என்ற நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டது . கீழ்கண்டவாறு அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. “இன்று மாலை 6.30 மணிக்கு மருதானை, சென்.ஜோசப் கல்லூரியிலும், நாளை மாலை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்திலும் எமது …

மேலும் படிக்க