அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ள கேள்வித்தாள் நடைமுறை மாற்றம், நிகழாண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்றாம் செமஸ்டர் தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். பொறியியல் முடிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததைத் தொடர்ந்து, திறன்மிக்க பொறியாளர்களை உருவாக்கும் நோக்கில் கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்காக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தலைமையில் 9 பேர் குழுவை பல்கலைக்கழகம் நியமித்தது. இந்தக் குழு புதிய தேர்வு …
மேலும் படிக்கTNPSC குரூப் 2: மீண்டும் தேர்வு எழுத 48 பேருக்கு அனுமதி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 பிரதான தேர்வின்போது இணையதளத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட 48 பேர் தேர்வாணைய அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை மறைமலைநகர் தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி குரூப் 2-இல் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வை நடத்தின. இதில் மொத்தம் 6 லட்சம் …
மேலும் படிக்கநடிகர் விஜய் வழங்கிய ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை
சென்னை சைதாப்பேட்டையில் டீ கடையில் வேலைபார்க்கும் எம்.ஷாகுல்ஹமீதுவின் மகள் பாத்திமா பிளஸ்-2 தேர்வில் 1,109 மதிப்பெண்கள் பெற்று, வறுமையின் காரணமாக என்ஜினீயரிங் படிப்பில் சேரமுடியாமல் கஷ்டப்பட்டார். இதுபற்றி கேள்விப்பட்ட நடிகர் விஜய், பாத்திமா என்ஜினீயரிங் படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றார். இதற்கான கல்வி கட்டணத்தை மாணவியை நேரில் அழைத்து விஜய் வழங்கினார்
மேலும் படிக்க10 மற்றும் பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை: டிசம்பர் 10 புதன்கிழமை – தமிழ் முதல் தாள் டிசம்பர் …
மேலும் படிக்கநெட் தேர்வு: டிசம்பர், 28ம் தேதி நடைபெறும்: CBSE
‘நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் CBSE (சிபிஎஸ்இ) டிசம்பர் 28ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி …
மேலும் படிக்கNEST-2015 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய அளவிலான கல்வி மற்றும் உதவித்தொகை தேர்வு ( NEST )ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெறுகிறது. இந்த தேர்வு எஸ்.இ.எம்.சி.ஐ ஆண்டுதோறும் நடத்திவருகின்றது. மேற்படிப்பில் சேர்க்கை பெற (CAT, GATE, GRE, TOFEL)போன்ற போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களின் போட்டி திறன்களை மேம்படுத்த NEST -2015 தேர்வு நடத்தப்படுகிறது. NEST -I மற்றும் NEST -II 2015 …
மேலும் படிக்கஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விட்டு பொறியியல் மாணவர் தற்கொலை
மதுரை தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் தெருவைச் சேர்ந்தவர் அபுதாகிர். தகரப் பட்டறை கூலித்தொழிலாளி. இவரது மகன் ஷேக்முகமது (18). பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.இ. தகவல் தொழில்நுட்பம் படித்து வந்தார். சக மாணவர்களிடமும், வீட்டருகே உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகும் குணமுடைய இவர், தீபாவளியன்று அதிகாலை 2.10 மணிக்கு தனது பேஸ்புக் முகவரியில் ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு’ என குறிப்பிட்டு நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று ஷேக்முகமது …
மேலும் படிக்கஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி: உயர் நீதிமன்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் …
மேலும் படிக்கஇந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்ககூடாது: முதல் அமைச்சர் ஜெயலலிதா
ஆங்கிலத்தைப் போல் இந்தியையும் முதன்மைப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு, தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்று தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை …
மேலும் படிக்கசிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த …
மேலும் படிக்க