Tag Archives: கல்வி

சமஸ்கிருத வாரம் ஏற்புடையது அல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

CBSC பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசு, மத்திய மனித …

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ( 07-07-2014 – திங்கட்கிழமை) தொடங்கியது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு என்ஜினியரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 570 கல்லூரிகளில் உள்ள பி.இ. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி இந்த வருடம் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் …

மேலும் படிக்க

சென்னை பல்கலைகழகம் இளநிலை பட்ட படிப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஜூலை 5) வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழகத்தின்  www.unom.ac.in இணைய தளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். அல்லது செல்பேசியில் Result space UNOMUG space மற்றும் பதிவு எண் என டைப் செய்து 56263 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீடு: 2011-12 கல்வியாண்டு முதல் இளநிலை பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் …

மேலும் படிக்க

ஜூலை 7 முதல் பொறியியல் பொது கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

பொறியியல் பொது கலந்தாய்வு ஜூலை 7 முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 27-ல் தொடங்க இருந்த பொறியியல் பொது கலந்தாய்வு உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி தள்ளிவைக்கப்பட்டது. புதிய படிப்புகளுக்கு அனுமதி கோரி ஏஐசிடிஇ-யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 10 கல்லூரிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கலந்தாய்வு தொடங்கும் தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஜூன் 27-ல் …

மேலும் படிக்க

சென்னை பல்கலைகழகம் முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைகழகம் முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு 2014 ஏப்ரலில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் புதன்கிழமை (ஜூலை 2) மாலை வெளியிடப்பட உள்ளன. www.results.unom.ac.in உள்ளிட்ட மேலும் சில இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். மறு மதிப்பீடு: பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-13 கல்வியாண்டு முதல் முதுநிலை பட்டப் படிப்புகளை மேற்கொண்டு வருபவர்கள் தேர்வு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் …

மேலும் படிக்க

பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கவிருந்த பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இன்று தெரிவித்துள்ளார். புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான மனுக்கள் மீது முடிவெடுக்க அவகாசம் கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த …

மேலும் படிக்க

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் செல்லாது- உயர்நீதிமன்றம்

மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி நியமிக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளுக்கு மாறாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, சந்திரன்பாபு, இஸ்மாயில் ஆகிய இருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். கல்யாணி மதிவாணன், பேராசிரியராக பணியாற்றாமல் இணை பேராசிரியராக மட்டுமே பணிபுரிந்ததால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் …

மேலும் படிக்க

பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை அண்ணா பல்கலைக்கழக www.annauniv.edu என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 23, 24 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தப் பிரிவினருக்கு மொத்தமுள்ள 500 இடங்களுக்கு …

மேலும் படிக்க

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு 27907 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். முதலிடம் சுந்தரமகேஷ் தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த 132 பேரில், மாணவர் சுந்தரமகேஷ் முதலிடம் …

மேலும் படிக்க

ஊன்றுகோல் தரும் கல்வி நிறுவனம் – வடசென்னை, செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர்கள் நல்லவர்களாக வளர்வதற்கு உறுதுணை புரிவது பெற்றோர்களும், ஆசிரியர்களுமே! அவ்வகையில் கல்வியில் சிறந்த ஒழுக்கமுள்ள மாணவ/மாணவிகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதலிடம் பெறுகிறதெனில், அதனை திறம்பட நிர்வாகித்து தந்திடும் பள்ளியும் முதலிடம் பெறுவதும் அம்மாணவர்களின் வாழ்க்கை தரத்திற்கு உறுதுணை புரிகிறது என்று சொன்னால் அதுமிகையல்ல. அத்தகைய பெருமை தந்த பள்ளியாக வடசென்னை, செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி திகழ்கிறது என்பதை 2013 …

மேலும் படிக்க