சென்னை பல்கலைகழகம் இளநிலை பட்ட படிப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஜூலை 5) வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழகத்தின்  www.unom.ac.in இணைய தளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

அல்லது செல்பேசியில் Result space UNOMUG space மற்றும் பதிவு எண் என டைப் செய்து 56263 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

மறு மதிப்பீடு:

2011-12 கல்வியாண்டு முதல் இளநிலை பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்கள் தேர்வு முடிவு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒரு தாளுக்கு ரூ. 750 கட்டணத்தை வரைவோலையாக பல்கலைக்கழக பதிவாளர் பெயருக்கு எடுத்து ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மறு கூட்டல்:

மாணவர்கள் தேர்வு முடிவு மறு கூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தனியாக கட்டணம் ரூ. 200-ஐ வரைவோலையாக எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

உடனடித் தேர்வு:

ஐந்தாம் பருவத் தேர்வு வரை எந்தப் பாடத்திலும் அரியர் இன்றி, ஆறாவது பருவத் தேர்வில் ஒரு தாளில் மட்டும் தவறியவர்கள் ஜூலை 26-ஆம் தேதி நடத்தப்படும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்-லைனில் ஜூலை 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். கட்டணம் ரூ. 300 ஆகும்.

Check Also

மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71