சென்னை பல்கலைகழகம் முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைகழகம் முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு:

சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு 2014 ஏப்ரலில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் புதன்கிழமை (ஜூலை 2) மாலை வெளியிடப்பட உள்ளன.

www.results.unom.ac.in உள்ளிட்ட மேலும் சில இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

மறு மதிப்பீடு: பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-13 கல்வியாண்டு முதல் முதுநிலை பட்டப் படிப்புகளை மேற்கொண்டு வருபவர்கள் தேர்வு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்-லைன் மூலம் ஜூலை 3-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டும்.

மறு மதிப்பீடுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசித் தேதியாகும்.

உடனடித் தேர்வு: மூன்றாவது பருவத் தேர்வு வரை அனைத்து தாள்களிலும் தேர்ச்சி பெற்று, நான்காவது பருவத் தேர்வில் ஒரு தாளில் மட்டும் தவறியவர்கள் ஜூலை 26-ஆம் தேதி நடத்தப்படும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

சென்னை அடையாறில் உள்ள புனித லூயில் காது கேளாதோருக்கான கல்லூரியில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

இதற்கான கட்டணமாக முதுநிலை பட்டப் படிப்புக்கு ரூ. 350-ம், தொழில் பட்டப் படிப்புக்கு ரூ. 600-ம் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

இதற்கு ஜூலை 3-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி.

தேர்வறை நுழைவுச் சீட்டுகளை ஜூலை 23-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Check Also

9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு கண்டனம்…

தமிழகத்தில் 9,10 மற்றும் 11 ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *