ஜூலை 7 முதல் பொறியியல் பொது கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

பொறியியல் பொது கலந்தாய்வு ஜூலை 7 முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முன்னதாக ஜூன் 27-ல் தொடங்க இருந்த பொறியியல் பொது கலந்தாய்வு உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி தள்ளிவைக்கப்பட்டது.

புதிய படிப்புகளுக்கு அனுமதி கோரி ஏஐசிடிஇ-யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 10 கல்லூரிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கலந்தாய்வு தொடங்கும் தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஜூன் 27-ல் தொடங்க இருந்த பொறியியல் பொது கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.

எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்:

ஜூலை 1-ல் நடைபெறவுள்ள பொதுப்பிரிவு கலந்தாய்வு குறித்து மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்கப்பட்டு வருவதாகவும். கவுன்சிலிங் தேதி, நேரம் தொடர்பாக டி.என்.இ.ஏ. (TNEA) இணையதளத்தில் விரிவாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Check Also

மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *