ஊன்றுகோல் தரும் கல்வி நிறுவனம் – வடசென்னை, செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர்கள் நல்லவர்களாக வளர்வதற்கு உறுதுணை புரிவது பெற்றோர்களும், ஆசிரியர்களுமே!

அவ்வகையில் கல்வியில் சிறந்த ஒழுக்கமுள்ள மாணவ/மாணவிகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதலிடம் பெறுகிறதெனில், அதனை திறம்பட நிர்வாகித்து தந்திடும் பள்ளியும் முதலிடம் பெறுவதும் அம்மாணவர்களின் வாழ்க்கை தரத்திற்கு உறுதுணை புரிகிறது என்று சொன்னால் அதுமிகையல்ல.

அத்தகைய பெருமை தந்த பள்ளியாக வடசென்னை, செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி திகழ்கிறது என்பதை 2013 -2014 ஆம் ஆண்டின், பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் முழு தேர்ச்சி பெற்றுள்ளதை கண்டு, பள்ளியின் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களின் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பெற்றோம்.

முதலிடம் பிடித்த A. முஹமது அர்ஷத் (498 / 500) மார்க்குகள். ஆங்கிலம், கணிதம் பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார். இது பற்றி அவர் கூறும் போது,

பாலர் (யூகேஜி) வகுப்பிலிருந்து இப்பள்ளியில் படித்து வருவதாகவும், பத்தாம் வகுப்பு வரை, எங்களை தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் தந்த ஊக்கமும், உற்சாகமும்தான் இந்த நிலையை அடையச் செய்தது என்றார்.

இரண்டாம் இடம் பிடித்த மாணவிகளில் ஒருவரான D. சாய் அர்ச்சனா (483/500 மார்க்குகள்) நம்மிடம், நானும் ஆரம்ப பள்ளியிலிருந்து இங்கு மாணவிதான். எங்கள் கல்விக்கு வழிகாட்டிய ஆசிரியைகளிடம் எந்த நேரமும் எங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதில் இவர்களும் பெற்றோர்கள்தான் என்று சொன்ன விதம் மனதிற்கு இதம்.

இரண்டாம் இடம் பிடித்த மாணவிகளில் மற்றொருவர் V. நிவேதா (483 / 500 மார்க்குகள்) கூறும்போது,எங்கள் பள்ளியில் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் எந்த வேறுபாடின்றி ஒவ்வொருவரையும் மிகவும் கவனமாக கவனிப்பதில், தங்கள் கடின உழைப்பை அர்ப்பணித்துள்ளதாக கூறினார்.

மூன்றாம் இடம் பிடித்த V. ஹரிஹரன் (480/500 மார்க்குகள்) கூறும்போது, இந்தப்பள்ளியில் ஒருமுறை சேர்ந்துவிட்டால், தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், எங்கள் மீது நம்பிக்கை கொண்டு, தங்கள் முழு ஒத்துழைப்பினை நல்குவதாக கூறினார்.

இந்த வெற்றிக்குப் பாடுபட்ட தலைமையாசிரியை R. ஜெயந்தி அவர்கள், “இது ஒரு கூட்டு முயற்சி ஆகும், ஆசிரியைகள், மாணவர்கள் ஒருவருக்கொருவர் புரிதல் தன்மை மற்றும் வெற்றியை இலக்காக கொண்டு உழைத்த உழைப்பு” மேலும் பெற்றோர்களும் இதற்கு காரணம் என்றார்.

பள்ளி தாளாளர் M.J. மார்ட்டின் கென்னடி அவர்கள் கூறியதாவது, இவர்கள் அனைவரும் எங்கள் பிள்ளைகள். அவர்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியும், வாழ்க்கை தரமும் பிரகாசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அந்த வகையில் கல்விப்பணியினை தொடர்கின்றோம் என்றார்.

மேலும் இந்தப்பள்ளி வளர்ச்சியடைந்து, பெரிய வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள்.

Check Also

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா பள்ளியில் ஆண்டு விழா!…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை சுங்கச்சாவடியில் அமைந்துள்ள  தங்கம் மாளிகையில் மிக பிரமாண்டமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *