சிபிசிஐடிக்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி.க்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை திறந்து வைத்தார்.

இன்று காலை 11.30 மணிக்கு கட்டடத் திறப்பு திறப்பு விழா நடைபெற்றது.  இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று கட்டடத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை செய்திருந்தது.

இப்போது கிண்டி தொழிற்பேட்டையில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எழும்பூரில் கட்டடப்பட்டுள்ள  புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டிருப்பதால், கிண்டியில் இருக்கும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் இங்கு மாற்றப்பட உள்ளது.

கட்டடத்தின் சிறப்பம்சங்கள்:

இந்த புதிய கட்டடத்தில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் தவிர, சைபர் குற்ற ஆய்வகம், பொருளாதார குற்றப்பிரிவு, ரயில்வே காவல்துறை, போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைகின்றன.

இதில் தரைதளத்தில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகங்கள் அமைகின்றன.

முதல் தளத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளின் அலுவலங்கள் அமைக்கப்படுகின்றன.

இரண்டாவது தளத்தில் எஸ்.பி. அளவிலான அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன.

மூன்றாவது தளத்தில் நிர்வாகப் பிரிவு அலுவலங்கள் அமைக்கின்றன.

நான்காவது தளத்தில் பொருளாதார குற்றப்பிரிவு, சைபர் குற்ற ஆய்வகம், சிறப்பு புலனாய்வு பிரிவு, நூலகம் ஆகியவை அமைகின்றன.

ஐந்தாவது தளத்தில் ரயில்வே காவல்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகியவை அமைகின்றன.

Check Also

பிஜேபி சார்பில் நலத்திட்ட உதவிகள்…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *