பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கவிருந்த பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இன்று தெரிவித்துள்ளார்.

புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான மனுக்கள் மீது முடிவெடுக்க அவகாசம் கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், ஏ.ஐ.சி.டி.இ.க்கு ஜூலை 3-ம் தேதி வரை அவகாசம் அளித்தது.

எனவே, தற்போதைய அட்டவணைப்படி கலந்தாய்வை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Check Also

மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *