ரஜினி நடிக்க மறுப்பு: எந்திரன் 2ம் பாகத்தில் அஜீத்?

எந்திரன் 2–ம் பாகம் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததால் வேறு நடிகர் தேர்வு நடக்கிறது. அஜீத் பெயர் பலமாக அடிபடுகிறது என்கின்றனர்.

ரஜினி–ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் ‘எந்திரன்’ 2010–ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இந்தி, தெலுங்கிலும் இது டப்பிங் செய்து வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது.

இதன் இரண்டாம் பாகத்தை ‘எந்திரன்–2’ என்ற பெயரில் எடுக்க ஷங்கர் விருப்பமாக இருக்கிறார். இதன் திரைக்கதையும் அவர் தயார் செய்துவிட்டார். விக்ரமை வைத்து ‘ஐ’ படத்தை எடுத்து வருகிறார். இது ரிலீசானதும் எந்திரன் 2–ம் பாகம் பட வேலைகளை துவக்குகிறார்.

எந்திரம் 2–ம் பாகம் படத்திலும் ரஜினியே நடிக்க வேண்டும் என்பது ஷங்கரின் ஆசை. இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது எந்திரன் 2–ம் பாகத்தில் நடிக்கும்படி ரஜினியிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் ரஜினி கருத்து கேட்டதாகவும் அவர்கள் நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடம்பை வருத்தி படங்களில் நடிக்கக்கூடாது என்று ரஜினியை அவர்கள் எச்சரித்துள்ளனர். எந்திரன் 2–ம் பாகம் படத்தில் உடம்பை வருத்துவது போல் நிறைய காட்சிகள் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்த படத்தில் ரஜினி நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதில் அஜீத்தை நடிக்க வைக்கலாமா என ஷங்கர் யோசிக்கிறாராம். வேறு சில நடிகர்களும் பரிசீலனையில் உள்ளனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *