தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு, தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என தமிழக அரசு …
மேலும் படிக்க‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்’: அலகாபாத் உயர்நீதிமன்றம்
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதித்துறையின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் பெறுவோர் அனைவருமே மாநிலக் கல்வித் துறையால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்தும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட விவரங்களையும் விசாரித்து வந்த …
மேலும் படிக்கசகாயம் மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் விசாரிக்கலாம் : உயர் நீதிமன்றம்
மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் பற்றி மட்டும் விசாரிக்கலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யலாம் என்றும், விவகாரம் பெரிய அளவிலானது என்பதால், விசாரணையை படிப்படியாக நடத்தலாம் என்றும் கூறினார். கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தவுக்கு …
மேலும் படிக்க2ஜி விசாரணை, விலகியிருக்க சிபிஐ இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் விலகியிருக்கும்படி, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. உத்தரவின் விவரம்: “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விசாரணை நடவடிக்கைகளில் புலனாய்வு அமைப்பின் …
மேலும் படிக்கசாமியார் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜர்: ஜாமின் மனு தள்ளுபடி
வட இந்திய மாநிலமான ஹரியானாவில், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் இன்று வியாழனன்று ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஒரு கொலை வழக்கில் பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் சாமியார் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜராகததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். ஹரியாணாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பான …
மேலும் படிக்ககருப்பு பணம் விவகாரம்: 289 கணக்குகளில் பணம் காலி…
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில், உள்ள 289 கணக்குகளில் பணம் இல்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் அந்த கணக்குகள் அனைத்தும் நிலுவையில் இருப்பதாக சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு …
மேலும் படிக்ககனிமவள முறைகேடுகளில் தமிழக அரசு சிலரை காப்பாற்ற முயல்கிறதா?
தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்திருப்பதன் மூலம் நீதிமன்ற உத்தரவை அவமதித்திருப்பதாக சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. …
மேலும் படிக்கஆன்லைனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்: உச்சநீதிமன்றம் கெடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மின்னணு தொழில் நுட்பத்தின் மூலம் கோரிக்கைகளைப் பெற்று, தகவல்களை அளிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து 3 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பொதுமக்கள் எழுத்துபூர்வ மாகவும், மின்னணு தொழில் நுட்பங்கள் மூலமாகவும் தகவல் …
மேலும் படிக்க5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை
தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தியதாக 2011-ல் வழக்கு தொடரப்பட்டது. கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேர், இலங்கை மீனவர்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீனவர்கள் 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் …
மேலும் படிக்ககருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியல் : மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் 627 பேர் கொண்ட பட்டியல் 2 சீலிடப்பட்ட உரைகளில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மூத்த வழக்குரைஞர் முகுல் ரஸ்தோகி தாக்கல் செய்தார். கருப்புப் பணம் பதுக்கியோர் பெயர் …
மேலும் படிக்க