சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மேல்முறையீடு

தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு, தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விஜயகாந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை தனக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகளை தெரிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை எனவும் மனுவில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Check Also

தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு திரு. K.R. நந்தகுமார் வேண்டுகோள்…

தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ …