Tag Archives: இளங்கோவன்

இளங்கோவன் ஜாமீன் நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்

காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற முன் ஜாமீன் நிபந்தனையை, இளங்கோவனின் கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வளர்மதி என்பவர் தொடர்ந்த வழக்கில், மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் தினமும் இளங்கோவன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த நிலையில், நிபந்தனையை தளர்த்தக் கோரி இளங்கோவன் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை …

மேலும் படிக்க

சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ஈ.வி.கே.எஸ்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி 5வது நாளாக இன்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி …

மேலும் படிக்க

இளங்கோவனுக்கு ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது : உயர்நீதிமன்றம்

இளங்கோவனின் முன் ஜாமினுக்கான நிபந்தனைகளை தளர்த்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்ற என்ற இளங்கோவன் தரப்பு வேண்டுகோளை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். காவல்துறை இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வரும் போது இளங்கோவனுடன் 2 …

மேலும் படிக்க

இளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண் ஊழியரைத் தாக்கியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்த விவரம்:  சென்னை, காமராஜர் அரங்கத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் வளர்மதி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி ஜி.நாராயணன் ஆகியோர் தன்னைத் தாக்கியதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.  இந்தப் புகாரின் அடிப்படையில், …

மேலும் படிக்க

இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை தொடர வேண்டாம்: ஜெயலலிதா

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், நாலாந்தர அரசியல்வாதிகளே பேசக் கூச்சப்படும் வார்த்தைகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை கண்டித்தும், இதற்காக அவர் மன்னிப்புக் கேட்கக் கோரியும், அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மீனவர் பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு தாம் எழுதிய …

மேலும் படிக்க

ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் எங்கும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட அதிமுகவினர், இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். அதே போல, நந்தம்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்காசி, மேலகரம் தஞ்சாவூர், கரூர், நாமக்கல், விழுப்புரம், …

மேலும் படிக்க

ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்பதே எனது கருத்து என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். பாஜகவினரும், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஜி.கே. வாசனும் ரஜினிகாந்தின் ஆதரவை எதிர்பார்த்து அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கருத்தை இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வரக் கூடாது. …

மேலும் படிக்க

நாடாளும் மக்கள் கட்சி கலைப்பு: காங்கிரஸில் இணைந்தார் நடிகர் கார்த்திக்

நாடாளும் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதன் தலைவர் நடிகர் கார்த்திக் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்திக், “நான் காங்கிரஸுக்கு புதியவன் அல்ல. மக்களவை தேர்தலிலும் எனது ஆதரவை அளித்தேன். இப்போது என் வீட்டுக்கு நான் திரும்பி வந்துள்ளேன். வீட்டில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. பிரச்சினை …

மேலும் படிக்க