Tag Archives: கல்புர்கி

கல்புர்கி கொலை: சந்தேகிக்கும் இருவரின் உருவ படங்கள் வெளியீடு

கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் உருவ படங்களை கர்நாடக போலீசார் வெளியிட்டுள்ளனர். கன்னட எழுத்தாளரான கல்புர்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக மாநிலம் தர்வாத்தில், மர்மநபர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அம்மாநில சிபிசிஐடி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் உருவப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் சிசிடிவியில் …

மேலும் படிக்க

எம்.எம்.கல்பர்கி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடகாவில் உள்ள தர்வாத்தில் உள்ள எம்.எம்.கல்பர்கியின் இல்லத்தில் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது கொலைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி, …

மேலும் படிக்க

மூத்த கன்னட எழுத்தாளர், முன்னாள் துணை வேந்தர் கல்புர்கி சுட்டுக் கொலை – இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணை

சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இந்துத்துவா அடிப்படைவாதி களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம். கல்புர்கி கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள யரகல் கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார். கன்னடத்தில் …

மேலும் படிக்க