குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 74. சுவாசக் கோளாறு காரணமாக சுவ்ரா முகர்ஜி கடந்த 7-ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.50 மணியளவில் இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் குடியரசுத் …
மேலும் படிக்கடில்லி சட்டசபை கலைப்பு : குடியரசுத் தலைவர் உத்தரவு
டில்லி சட்டசபையை கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும்பான்மை பெறாத காரணத்தால் எந்த கட்சியும் டில்லியில் ஆட்சி அமைக்க முன் வராததால், டில்லி சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரை செய்திருந்தார். இதனை அடுத்து குடியரசுத் தலைவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவைக் கலைக்கப்பட்டதால், டில்லி சட்டப்பேரவையின் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கை ரத்து …
மேலும் படிக்கடெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரை!
டெல்லியில் மறுதேர்தல் நடத்த பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார். டெல்லியில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், 49 நாள் ஆட்சிக்குப் பிறகு, லோக்பால் மசோதாவை அமல்படுத்த முடியவில்லை எனக் கூறி ராஜினாமா செய்தார். அதன்பிறகு, அங்கு குடியரசுத் …
மேலும் படிக்கமங்கள்யான் செவ்வாய் கிரகப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது:
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் புதன்கிழமை (செப்.24) காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தை ஒட்டிய சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும். மங்கள்யானின் வேகத்தை குறைக்கும் திரவ இயந்திரம் இன்று காலை 7 மணி 41 நிமிடங்களுக்கு …
மேலும் படிக்ககுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் பயணம்
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் சுற்றுப் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். இன்று அங்கு அவர் வியட்நாம் பிரதமர், துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஆளும் கம்யூஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியோர்களை சந்திக்கிறார். எண்ணெய் துறையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. மேலும் அவர் அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட உள்ளார்.
மேலும் படிக்கஅனைத்து குடிமக்களின் உரிமையையும் புதிய அரசு பாதுகாக்கும் – குடியரசுத் தலைவர் உரை
நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் இன்று காலை துவங்கியது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுமித்ரா மகாஜனுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நடந்து முடிந்துள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது. நிலையான அரசு அமைய …
மேலும் படிக்க