சீனாவில் கடந்த 40 நாட்களாக மழை கொட்டிவருகிறது . இதனால் பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது குறிப்பாக உலகின் மிகப்பெரிய அணையாக கருதப்படும் சீனாவின் த்ரீ கார்ஜஸ் அணைகள் உடையும் அபாயத்தில் உள்ளது . இந்த அணை உடைந்தால் யுகான் மாகாணமே நீரில் மூழ்கும். 2012 ஆம் ஆண்டு இந்த அணை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இந்த அணை கட்ட …
மேலும் படிக்கஜப்பான் பாதுகாப்பு மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம்
ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை ஜப்பான் நிறைவேற்றியிருப்பது பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டு ராணுவத்தை நாட்டுக்கு வெளியேயும் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தயாயு மற்றும் செனகாகு தீவுகளுக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் சீனாவின் கிழக்குக் கடல் எல்லையில் அடிக்கடி பதற்றம் ஏற்படும் சூழ்நிலை …
மேலும் படிக்கபெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு
இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில், முதல் முறையாக சீனா தனது ராணுவத்தின் 80 சதவிகித ஆற்றலை வெளிப்படையாகக் காட்டியது. பெய்ஜிங் நகரில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ராணுவத்தின் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில் சீனா, தன்னுடைய ராணுவ ஆற்றலை உலகுக்கு உணர்த்தும் வகையிலான அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியது. …
மேலும் படிக்கசீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார். இந்த போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் 9.80 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும் ட்ரேவான் பிரம்மால்,ஆன்ட்ரே டி கிராஸ்சஸ் ஆகியோர் …
மேலும் படிக்கசீனாவில் இரசாயன ஆலையில் வெடிப்பு
சீனாவின் கிழக்கு மாகாணமான ஷாண்டொங் மாகாணத்தில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு ஒன்று நடந்ததாக சீன ஊடகங்கள் கூறியுள்ளன. ஷிபோ நகருக்கு அருகே அந்த இடத்தில் இருந்து புகை வந்துகொண்டிருப்பதை தொலைக்காட்சி படங்கள் காண்பித்தன. 5 கிலோமீட்டர்கள் தூரம் வரை அந்த வெடிப்பு உணரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. வெடிப்பை அடுத்து உருவான தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடுகின்றனர். பாதிப்பு குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.
மேலும் படிக்கஉலக தடகள சாம்பியன் போட்டிகள் பீஜிங்கில் நாளை துவக்கம்
மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகத் தடகளச் சாம்பியன் போட்டிகள் சனிக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கில் தொடங்குகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்ற போதிலும், இந்த ஆண்டு கூடுதல் பரபரப்பும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை ஜமைக்காவின் உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது ஊக்க மருந்து பயன்படுத்தி, பரிசோதனையில் சிக்கி தடை விதிக்கப்பட்டிருந்த காலத்துக்கு பின்னர் …
மேலும் படிக்கஇலங்கையில் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமானதுதான்: சீனா விளக்கம்
இலங்கைத் துறைமுகத்தில் சீன நாட்டுக் கடற்படையின் நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமான நிகழ்வுதான் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனக் கடற்படையின் இரண்டு நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ள நிலையில், இது வழக்கமான நிகழ்வுதான் என சீனா விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக சீனப் பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவர், அந்நாட்டின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: பாரசீக …
மேலும் படிக்கஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி போராட்டம் வலுக்கிறது.
ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சீன தேசிய தினத்துக்கு முன்னதாக ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். இது வரை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களிலேயே, செவ்வாய் கிழமை நடக்கும் போாரட்டம்தான் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கில் இரவு நேரம் நெருங்கிய நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் நகரின் மையப்பகுதியிலும், முக்கிய சந்திப்புகளிலும் குவிய ஆரம்பித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னதாகக் கலைந்து போகச் சொன்ன சீனாவின் …
மேலும் படிக்கசீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி
மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி. சீன அதிபர் இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்தும் மற்றும் நீண்ட நாட்களாக இரு நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் சீன இராணுவத்தின் சமீபத்திய ஊடுறுவல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த 1996-ல் ஜியாங் ஜீமென் , 2006–ல் ஹூஜிண்டாவோ ஆகியோரை அடுத்து …
மேலும் படிக்கசீனாவின் முதல் விண்வெளி நிலையம் 2022ம் ஆண்டில் முடிவடையும்
சீனா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2022ம் ஆண்டு நிறுவப்போவதாகக் கூறியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, விண்வெளி நிலையம் அமைக்கும் வேலைகளைத் தொடங்கப்போவதாக சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் இது குறித்த விவரமான கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறார்கள். புதிய விண் ஆய்வுக் கூடம் ஒன்று இரண்டாண்டுகளில் தொடங்கப்படும்; அதன் பின்னர் ராக்கெட்டுகள் மற்றும் பிற அமைப்புகள் உருவாக்கப்படும். சீன விண்வெளி வீரர்கள் ஏற்கனவே விண்வெளியில் கலன்களை பொருத்தும் …
மேலும் படிக்க