Tag Archives: ஜாமீன்

இளங்கோவன் ஜாமீன் நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்

காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற முன் ஜாமீன் நிபந்தனையை, இளங்கோவனின் கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வளர்மதி என்பவர் தொடர்ந்த வழக்கில், மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் தினமும் இளங்கோவன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த நிலையில், நிபந்தனையை தளர்த்தக் கோரி இளங்கோவன் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை …

மேலும் படிக்க

சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ஈ.வி.கே.எஸ்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி 5வது நாளாக இன்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி …

மேலும் படிக்க

இளங்கோவனுக்கு ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது : உயர்நீதிமன்றம்

இளங்கோவனின் முன் ஜாமினுக்கான நிபந்தனைகளை தளர்த்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்ற என்ற இளங்கோவன் தரப்பு வேண்டுகோளை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். காவல்துறை இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வரும் போது இளங்கோவனுடன் 2 …

மேலும் படிக்க

ஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை

ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனு மீது நாளையே (புதன்கிழமை) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது. ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அவசர மனு ஒன்றை அளித்தனர். கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்ட அந்த …

மேலும் படிக்க

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6க்கு ஒத்திவைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ம் தேதி வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பெங்களுரு உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், இன்று இந்த மனு தொடர்பில் விடுமுறைக்கால சிறப்பு அமர்வின் நீதிபதி ரத்னகலா …

மேலும் படிக்க