Tag Archives: திருச்செந்தூர்

சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

IUML தமிழ் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் காயல்பட்டினம் M.N.அகமது சாகிப் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,  3 மனிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் ஆவணித் திருவிழாவிற்கான …

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. கடந்த 24-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப …

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த திருநாள். எனவே அன்றைய தினம் அவரை வழிபட்டால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். வைகாசி விசாக திருவிழா அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும், அறுபடை வீடுகளளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படும். விழாவையொட்டி …

மேலும் படிக்க