சட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி 10-11-2014 அன்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7-11-2014 அன்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான …
மேலும் படிக்கசகாயம் ஆணையத்துக்கு தாமதம் ஏன்? கருணாநிதி கேள்வி
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட சகாயம் ஆணையத்துக்கு அனுமதி அளிக்க தாமதம் செய்யப்பட்டது ஏன்? என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு தான்” என்று தலைப்பிட்டிருக்கின்றன. உண்மை தான்; முறைகேடு நடக்கும் போது தானே, வெளிச்சத்துக்கு வர முடியும்? அந்த …
மேலும் படிக்கபசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 107-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மற்றும் சில முக்கியப் பிரமுகர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் படிக்கதமிழக முதல்வராகப் பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம், திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அவர் ஏற்கெனவே வகித்த நிதி, பொதுப் பணித் துறைகளுடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த துறைகளும் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற அமைச்சர்களுக்கு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அளிக்கப்பட்ட அதே பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், 30 அமைச்சர்களும் …
மேலும் படிக்கமீண்டும் விரட்டப்பட்டார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
தேனி தொகுதியில் பிரசாரத்திற்குப போன இடத்தில் சீலையம்பட்டி என்ற இடத்தில் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து கொண்டு கடந்த தேர்தலின்போது உறுதியளித்த பசுமை வீடு திட்டம் என்னவாயிற்று, எங்களுக்கு ஏன் வீடு கட்டித் தரவில்லை என்று கேட்டு எதிர்ப்பு குரல் கொடுக்கவே தேர்தல் பிரச்சாரத்தை தொடரமுடியாமல் சென்றுவிட்டார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். இதுப்பற்றி அந்த பெண்கள் கூறும்போது, பசுமை வீட்டு கட்டித்தருவதாக கூறி ஏறக்குறைய ரூ.50 ஆயிரம் …
மேலும் படிக்க