Tag Archives: பலி

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உள்பட 5 பேர் பலி….

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பத்மநாபன் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த வயதான பெண்மணி …

மேலும் படிக்க

கடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…

வட சென்னை பகுதி வாழ் மக்களுக்கு மெரீனா கடற்கரையை விட எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் கே. வி. குப்பம், ஒண்டிகுப்பம், திரு சின்னகுப்பம், பலகை தொட்டி குப்பம், புது வண்ணை சேமியா கம்பெனி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா போல வருவதுண்டு. இங்குள்ள ஆபத்தினை உணராமல், சரிவர கண்காணிப்பில்லாத காரணத்தால் இன்று மாலை மூன்று குடும்பத்தை சேர்ந்த அருள்ராஜ (18), விஷ்ணு (14), துர்கா(17), மார்கரேட்(13) மார்டின்(13) …

மேலும் படிக்க

கடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…

வட சென்னை பகுதி வாழ் மக்களுக்கு மெரீனா கடற்கரையை விட எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் கே. வி. குப்பம், ஒண்டிகுப்பம், திரு சின்னகுப்பம், பலகை தொட்டி குப்பம், புது வண்ணை சேமியா கம்பெனி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா போல வருவதுண்டு. இங்குள்ள ஆபத்தினை உணராமல், சரிவர கண்காணிப்பில்லாத காரணத்தால் இன்று மாலை மூன்று குடும்பத்தை சேர்ந்த அருள்ராஜ (18), விஷ்ணு (14), துர்கா(17), மார்கரேட்(13) மார்டின்(13) …

மேலும் படிக்க

கொரோனாவுக்கு முதல் ஊடகவியாளர் பலி….

ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் திரு. வேல்முருகன் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென உயிரழிந்த சம்பவம் ஒட்டு மொத்த பத்திரிகை, ஊடகவியாளர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் களப்பணியில் உள்ள‌ பத்திரிகையாளர்கள், ஊடகவியாளர்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். ஏனெனில் நம்மை நம்பி நம் …

மேலும் படிக்க

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், கடந்த 24–ந் தேதி பக்ரீத் பண்டிகையின்போது லட்சக்கணக்கானோர் கூடி, மினா நகரில் சாத்தான் சுவர் மீது கல்வீசினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த …

மேலும் படிக்க

இமாச்சலில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி, 15 க்கும் மேற்பட்டோர் காயம்

இமாச்சல பிரதேசத்தில், 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம் ரெகோங் பியோ என்ற இடத்தில் இருந்து ராம்பூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தியா-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது நாத்பா என்ற இடத்தில் அந்த பேருந்து சென்ற போது திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. சட்லெஜ் …

மேலும் படிக்க

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 200 பேர் காயம்

சவுதியின் கோபார் நகரில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர். சவுதியின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகப் பெரிய ஆயில் நிறுவனமான சவுதி அராம்கோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். …

மேலும் படிக்க

ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 6 பேர் பலி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர், தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் வசிப்பவர் ராஜேஷ் (30). இவர் சென்னையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று திருமண நாள் என்பதால் குடும்பத்தாருடன் காரில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா …

மேலும் படிக்க

பீஹார் தசரா விழாவில் ஜன நெரிசலில் சிக்கி குறைந்தது 32 பேர் பலி

இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பீஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்து பண்டிகையான தசரா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பெரிய விழா ஒன்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் திரண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. பாட்னாவின் காந்தி மைதானத்தில் நேற்று தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 32 பேர் உயிரி ழந்தனர். பலர் …

மேலும் படிக்க