கடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…

வட சென்னை பகுதி வாழ் மக்களுக்கு மெரீனா கடற்கரையை விட எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் கே. வி. குப்பம், ஒண்டிகுப்பம், திரு சின்னகுப்பம், பலகை தொட்டி குப்பம், புது வண்ணை சேமியா கம்பெனி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா போல வருவதுண்டு.

இங்குள்ள ஆபத்தினை உணராமல், சரிவர கண்காணிப்பில்லாத காரணத்தால் இன்று மாலை மூன்று குடும்பத்தை சேர்ந்த அருள்ராஜ (18), விஷ்ணு (14), துர்கா(17), மார்கரேட்(13) மார்டின்(13) ஆகியோர் கடலில் குளிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட எதிர்பாரத சுழற்சியில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் அருள்ராஜ்(18) என்பவரின் உயிரற்ற உடல் கரை ஒதுங்கியது மற்றவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய போது, காவலர்களின் பற்றாக்குறையினால்தான் நாம் சரியான பாதுகாப்பினை வழங்க முடியவில்லை என‌ தெரிவித்தனர்.

இவர்கள் சொல்வது உண்மை தான் மறுக்க முடியவில்லை. ஆனாலும் பொது மக்களின் ஆர்வ கோளாறு இத்தகைய சோகங்களுக்கு வழியாகி விடுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

நாம் அரசுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் மக்களின் ஜனத் தொகைக்கேற்ற வகையில் காவல்துறையையும் பலப்படுத்த வேண்டும். அவர்களது அர்ப்பணிப்புக்கும் செவி சாய்க்க வேண்டும் என்பது தான்.

இனி வருங்காலங்களில் இத்தகைய விபத்தை, ஆபத்தை தவிர்க்க துரிதமாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. நிறைவேற்றி தருவார்களா…?

செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” Ln B. செல்வம்
சிறப்பாசிரியர்
ஜீனியஸ் டீவி

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …