Tag Archives: பிரவீன் குமார்

வெற்றி பெற்றதாக போஸ்டர் வைத்தது தொடர்பாக அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு: தேர்தல் ஆணையர் பிரவீண்குமார்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர் அடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார். மேலும் காஞ்சிபுரத்தில் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக போஸ்டர் அடித்த விவகாரத்தில் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக நேற்று காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட …

மேலும் படிக்க

தேர்தலை பொதுமக்கள் நேரடியாக இணையதளம் மூலம் பார்க்க முதல் முறையாக ஏற்பாடு

வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் பார்க்க முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 39 மக்களவை, ஆலந்தூர் சட்டப்பேரவை   உள்ளிட்ட தொகுதிகளில் மொத்தம் 60,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 60,817 வாக்குச் சாவடிகளில் 17,684  சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட சாவடிகளை இணையதளம் மூலம் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாளான …

மேலும் படிக்க

தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு

தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்காமல் மக்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரவீண்குமார் பேசியதாவது, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று(22-04-2014) மாலை 6 மணி முதல் 24-04-2014 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை …

மேலும் படிக்க

துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

15-04-2014 அன்று துணை வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி வாரியாக ஆண், பெண் வாக்காளர் விவரங்களும் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும் 19ம் தேதிக்குள் வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை நிறுத்த முடியாது? தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்?

தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என்றும், அரசு ஸ்மால் பஸ்களில் உள்ள இலை படத்தை மறைக்க போக்குவரத்து துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியபோது, தேர்தலுக்காக பறக்கும் படையினர் நடத்தும் சோதனையின்போது, ஆதாரம் …

மேலும் படிக்க