தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு

தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்காமல் மக்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரவீண்குமார் பேசியதாவது, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று(22-04-2014) மாலை 6 மணி முதல் 24-04-2014 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி ஹோட்டல், பார், பொது இடங்களில் மது விற்பனை செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், தபால் அலுவலக கணக்குப் புத்தகம், பான் கார்டு, ஆதார் அட்டை, பென்ஷன் ஆவணம், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, 100 நாள் திட்ட அடையாள அட்டை போன்ற 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தலுக்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *