Tag Archives: மகளிர்

சென்னை திருவொற்றியூரில் BJP வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை….

சென்னை திருவொற்றியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஸ்ணகுமார் வழிகாட்டுதலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பி.வசந்தமாலா தலைமையில் மக்கள் நலனுக்காக கந்த சஷ்டி கவசம் பாடி கூட்டுப்பிரார்த்தனை செய்து கொரோனா நிவாரணமாக நலிந்த மகளிர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், …

மேலும் படிக்க

மகப்பேறு கால விடுமுறை 3 மாதத்திலிருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணிபுரியும் பெண்களுக்கு தாய்மை அடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது. …

மேலும் படிக்க

புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது: ”சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி …

மேலும் படிக்க

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனை முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, “நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் …

மேலும் படிக்க