தீவிரவாதிகளின் கொடூர தற்கொலை தாக்குதலில் வீர மரணம் அடைந்த எம் 42 ராணுவ சகோதரர்களுக்கு PPFA, ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் கண்ணீர் அஞ்சலி.
மேலும் படிக்கஇந்தியாவுடன் போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மிரட்டல்
இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் அண்மையில் பேசுகையில் இந்திய ராணுவம் விரைவான, குறுகிய காலப் போருக்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் 50ஆவது ஆண்டு தினம், பாகிஸ்தான் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தேசியப் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் …
மேலும் படிக்கபெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு
இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில், முதல் முறையாக சீனா தனது ராணுவத்தின் 80 சதவிகித ஆற்றலை வெளிப்படையாகக் காட்டியது. பெய்ஜிங் நகரில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ராணுவத்தின் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில் சீனா, தன்னுடைய ராணுவ ஆற்றலை உலகுக்கு உணர்த்தும் வகையிலான அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியது. …
மேலும் படிக்கவீர மரணமடைந்த மேஜர் முகுந்த் மனைவி இந்து வின் உருக்கமான கவிதை
மேஜர் முகுந்த் வரதரஜானின் காதல் மனைவி இந்து ரிபெக்கா வர்கீஸ். கேரளத்தைச் சேர்ந்த ரிபெக்கா, தனது கணவரின் வீர மரணத்தால், நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தால் பெருமைப்படுகிறார். ஆனால் ஒரு சாதாரண மனைவியாக, அவர் தனது கணவரின் மரணத்தால் எந்த அளவுக்கு உடைந்து போயிருக்கிறார் என்று அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தான் முகுந்த் மீது வைத்திருந்த அன்பை, பாசத்தை, நேசத்தை ஆங்கிலத்தில் தனது …
மேலும் படிக்கமேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெ.ஜெயலலிதா
இது தொடர்பாக தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன், தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் …
மேலும் படிக்கமேஜர் முகுந்த் உடலை எடுத்து வந்த ராணுவ பைலட் எழுதிய உருக்கமான கடிதம்
கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவரான மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை விமானத்தில் கொண்டு வந்த விமானி முகுந்தின் தாய்-தந்தையருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏர்-இந்தியா விமானத்தை ஓட்டி வந்த கேப்டன் எஸ். சீனிவாசன் என்ற அந்த விமானி எழுதிய கடிதத்தில், பாசத்திற்குரிய தந்தை மற்றும் தாய் அவர்களுக்கு என்று தொடங்கும் அக்கடிதத்தில், …
மேலும் படிக்கமேஜர் முகுந்த் உடல் சென்னையில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜன் உடல், சென்னை, பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் 42 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இரு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் இறந்தனர். இதில், …
மேலும் படிக்க