காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த அவர், உதகை படகு இல்லம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை அரசு மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதற்கு விரைவில் …
மேலும் படிக்கதேமுதிக யாருடன் கூட்டணி? விஜயகாந்த் பதில்
தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தேமுதிக மக்களிடமும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. வேறு யாரிடமும் கூட்டணி இல்லை என்று கூறினார். இந்த நாள் மிக்க மகிழ்ச்சியான நாள். தே.மு.தி.க. தொடங்கி 10 ஆண்டுகள் …
மேலும் படிக்கசட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மேல்முறையீடு
தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு, தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என தமிழக அரசு …
மேலும் படிக்கரஜினியை மட்டும் சந்தித்ததால் விஜயகாந்த் கோபம்? சமாதானம் செய்தாரா? நரேந்திர மோடி
ரேந்திர மோடி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் வலுசேர்க்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். பின்னர் பேட்டியளித்த ரஜினிகாந்த், மோடியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் என்றார். நரேந்திர மோடி வலிமையான தலைவர், சிறந்த நிர்வாகி என்றும் கூறினார். இதற்கிடையே ரஜினியை சந்தித்த நரேந்திர மோடி, தமிழக பாஜ கூட்டணியில் அதிக வாக்கு …
மேலும் படிக்கஎவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது – விஜயகாந்த்
முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனவே கண்டிப்பாக அவரை எதிர்த்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று செய்தியார்களிடம் பேசினார் விஜயகாந்த். அப்போது பாஜக கூட்டணியில் இணைந்தது தொடர்பாகவும், அதிமுகவுக்கு எதிரான பிரசாரம் தொடர்பாகவும் அவர் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். எனவே கண்டிப்பாக அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று வேகமாக …
மேலும் படிக்கவேட்பாளரே இல்லாமல் தேர்தல் பிரச்சாரம்: விஜயகாந்த்
பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிகவிற்கான தொகுதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், இன்று மாலை திருவள்ளூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குகிறார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த். நேற்று பாஜக தனது கூட்டணி விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்திருந்தது. இதற்காக அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருவதாக இருந்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படாமல் போனதால் ராஜ்நாத் சிங்கின் சென்னைப் பயணம் ரத்தானது. …
மேலும் படிக்க