பழைய வண்ணையம்பதி, ஆண்டியப்பன் முதல் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியினை முன்னிட்டு, அரசு வழிக்காட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு காலையில் அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாலையில் அம்மனும், விநாயகரும் சந்தனகாப்பில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காளியம்மன் செய்தியாக்கம், படப்பதிவு : “கிங்மேக்கர்” திரு.B. செல்வம்
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ எங்கள் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
மேலும் படிக்கவிநாயகர் சதுர்த்தி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னவே யானை முகத்தவனே என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி