தமிழகத்தில், 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் 41 இடங்களில் இயங்கி வருகின்றன.
வாகன ஓட்டிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்த கட்டண உயர்விற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் மற்றும் லாரி உரிமையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், ஆம்னி பேருந்துகள் கட்டணம் மற்றும் சரக்கு வாகனங்களின் வாடகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.