அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் மத்திய சென்னை அமமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, மத்திய சென்னை, மத்திய மாவட்டம், துறைமுக பகுதி, 59 வது வட்டம் , வால்டாக்ஸ் சாலை, டில்லி ஓட்டல் அருகில் திரு. சி. விஜயன், திரு. ” பூங்கா” ராஜன் ஆகியோரது ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் திரு. P.சந்தான கிருஷணன் தலைமையில் பொதுமக்களுக்கு போர்வை மற்றும் பிரியாணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துறைமுக பகுதி கழக செயலாளர் திரு. E.B. பாண்டியன், மாவட்ட பொருளாளர் திரு. முகமது சித்திக் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி