ஆரவாரமான விழா…தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு

திருச்சி மாநகரில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு 22-06-19, சனிக்கிழமை காலை 10 மணியளவில், மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களி்ன் தலைமையில் திருமதி. சசிகலா ரவீந்திரதாஸ், திருமதி. விஜி சுபாஷ் மற்றும் பலர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஐஜெயூ முன்னாள் தலைவர் எஸ். என். சின்ஹா அவர்கள் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு சி. விஜயபாஸ்கர் மற்றும்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. எச்.வி. ஹண்டே அவர்களும், மறைந்த டியூஜெ நிறுவனர் ஐயா ரவீந்திரதாஸ் அவர்களது உருவப்படத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. எச்.வி. ஹண்டே ஆற்றிய சிறப்புரையில் நிறுவனர் அவர்களோடு பழகிய நாட்களை நினைவு கூர்ந்தார்.

மறைந்த தினமலர் வெளியீட்டாளர் திரு. ராகவன் அவர்களது திருவுருப்படத்தினை பிரஸ் கவுன்சில் உறுப்பினர் திருமதி சபீனா இந்திரஜித் திறந்து வைத்தார். மறைந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்தினை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மாண்புமிகு வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்து சிறப்புறையாற்றினார்.

மாநாட்டு மலரை மக்கள் போராளி மேதா பட்கர் வெளியிட்டார். தொடர்ந்து போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷனுக்கு வழங்கப்பட்ட சாதனையாளர் விருதை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் திரு. ‘நட்பின் மகுடம்’ MJF Ln Dr.லி. பரமேஸ்வரன் அவர்கள் சார்பாக தலைமை நிலைய செயலாளர் ” ஜீனியஸ்” K.சங்கர் பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில், மறைந்த தமிழின தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்களது திருவுருவப்படத்தினை முன்னாள் அமைச்சர் திரு. கே. என். நேரு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து கலைஞரின் கலையுலகப் பயணம் ஆவணப்படத்தின் (எழுத்து, இயக்கம் டி.எஸ்.ஆர். சுபாஷ்) பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இம் மாநாட்டில் தமிழ்நாடு பத்திரிகையாளா்களின் சங்கம் மாநில அமைப்புச் செயலாளர் திரு. நட்பின் மகுடம் MJF Ln Dr.லி. பரமேஸ்வரன் அவர்களது வழிகாட்டுதலின்படி வட சென்னை மாவட்டம் டியூஜெ நிர்வாகிகளான மாவட்ட தலைவர் திரு.R. விநாயகமூர்த்தி, மாவட்ட பொருளாளர் திரு. I.கேசவன், மாவட்ட துணை தலைவர் திரு.”ஜீனியஸ்” K. சங்கர், மாவட்ட இணை செயலாளர் திரு.L. வேலாயுதம், உறுப்பினர்கள்(டியூெஜெ) திரு.P. K. மோகனசுந்தரம், திரு. சேகர், திரு. சுரேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

தொடர் தனது அலுவலக பணியினால் TUJ மாநில அமைப்புச் செயலாளர் “நட்பின் மகுடம் ” MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களால் திருச்சி மாநில மாநாட்டில் கலந்துக் கொள்ள முடியவில்லை. அவர் சார்பாக பெற்றுக் கொண்ட விருது சென்னை திரும்பிய பின் நேரில் சந்தித்து அவரிடம் வழங்கி சிறப்பித்தோம்.

ஔிப்பதிவு: “ஜீனியஸ்” K.சங்கர்
படத்தொகுப்பு: அமுரா

Check Also

பசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…

சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து …