பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு. சென்னையில் பரபரப்பு…

சென்னை, ஆவடியில் இராணுவத்திற்கு சொந்தமான பாதுகாப்புத்துறை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை நம்பி 41 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையினை மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்து, அதற்கான ஒப்பந்தம் 16.06.2021 அன்று நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் கார்பரேட் நிறுவனமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக சென்னை ஆவடி தொழிற்சாலை வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று பிரதமர் மோடி அவர்களது உருவபொம்மையினை எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தொழிலாளர்கள் நம்மிடம் பேசியதாவது, திறம்பட நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த, தொழிலாளர்களாக எங்களது கடுமையான உழைப்பால் நம் இந்திய தேசத்தின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வந்த இந்த நிறுவனத்தை மத்திய அரசு தன் சுய நலனுக்காக கார்பரேட் நிறுவனங்களுக்கு தந்து தொழிலாளர்களின் நலனை நசுக்கிவிட்டது. இந்த தொழிற்சாலையினை நம்பி துணை நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படையும் என்றனர்

Check Also

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் …