SDPI கட்சி தன்னார்வலர்களின் மனிதநேய சேவை. இதற்கு இல்லை ஈடு இணை….

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சி செயல்வீரர்கள்! இவர்களின் இந்த மனித நேய பணியை மக்கள் மிகவும் பாராட்டினர்

கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த முதியவர் இன்று (29.7.2020) புதன் அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அவரின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சியின் திட்டுவிளை நகர தலைவர் மைதீன் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.

அதன்படி குமரி மாவட்ட SDPI கட்சியினர் ஆலோசனையின் படி உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலை மற்றும் அனைத்து வகையான பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி பயிற்சி அளிக்கப்பட்ட எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர் குழு அங்கு விரைந்து சென்று ஜனாஸாவுக்கான தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.

இந்நிகழ்வின் போது எஸ்டிபிஐ கட்சி மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மற்றும் திட்டுவிளை நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்
சில நேரங்களில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தி வைத்திருப்பதால் அவர்களால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாத சூழல் உள்ளது. இதனால் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல் கண்ணியமான முறையில் அவர்களின் மத நம்பிக்கைபடி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் SDPI கட்சி சார்பாக தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக SDPI கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Check Also

தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …