அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தாக்கப்பட்டார் – அரசியலில் நல்லவர்கள் அடிமேல் அடி வாங்குவார்களோ?

டெல்லி சுல்தான்புரியில் கேஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த அவரது கன்னத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அறைந்தார். அவரும் ஆம் ஆத்மி தொப்பி அணிந்திருந்தார்

உடனடியாக அந்த நபரை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். பின்பு அந்த நபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவத்திற்குப் பின்னர் பாஜகவை கடுமையாக விமர்சித்த கேஜ்ரிவால், பிரதமர் பதவியை அடைய ஏன் சிலர் வன்முறையை கடைபிடிக்கிறார்கள் என தெரியவில்லை. வன்முறையால் எங்களை கட்டுப்படுத்த முடியும் என நினைக்காதீர்கள். கடைசி மூச்சிருக்கும்வரை வரை போராடுவோம் என்றார்.

அரசியலில் நல்லவர்கள் அடிமேல் அடி வாங்குவார்களோ? இதனை சுயநலமில்லாத அரசியல் நாகரீகம் தெரிந்த தலைவர்கள் கண்டிக்கலாமே?

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published.