ஐ.பி.எல்.பிக்ஸிங் – சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை நீக்குங்கள் – சுப்ரீம் கோர்ட் பரிந்துரை

மாட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் தடை மற்றும் சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அதிரடி பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.

தனது அறிக்கையை அந்த குழு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அதில், ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம் சில அதிரடியான யோசனைகளைத் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் பதிலைக் கோரியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரை நியமிக்க வேண்டும்

ஐ.பி.எல். மாட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மறு உத்தரவு வரும் வரை  ஐ.பி.எல். போட்டிகளில் நீக்கி வைக்க வேண்டும்.

இந்த பரிந்துரைகளுக்கான பதிலை கிரிக்கெட் வாரியம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கிரிக்கெட் வாரியம் நாளை தாக்கல் செய்யும் பதிலை தொடர்ந்து ஐ.பி.எல். மாட்ச் பிக்ஸிங் வழக்கில் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *