தாய்லாந்து சாட்டிலைட் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களை கண்டுபிடித்தது?

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் 300 பாகங்களை தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

இந்த சாட்டிலைட் படம் தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட்டில் இருந்து மார்ச் 24 ம் தேதி படம் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு நாள் முன்புதான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 122 பொருட்களை பிரெஞ்ச் சாட்டிலைட்  படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த 300 பொருட்களும் தென்மேற்கு பெர்த்திலிருந்து சுமார் 2700 கி.மி தொலைவில் இருப்பதாக காட்டிகிறது. அதாவது பிரெஞ்ச் சாட்டிலைட் படம் பிடித்த இடத்தில் இருந்த சுமார் 200 கி.மி. தொலைவில் உள்ளது.

ஆனால் இது காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள்தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தாய்லாந்து தெரிவித்துள்ளது. அனைத்து தகவல்களும் மீட்பு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி

295 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 280 …

Leave a Reply

Your email address will not be published.