இந்தியப் பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டு பிடிப்பு:மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370ன் பாகங்களா?

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ஆவுஸ்திரேலியாவின் தேடுதல் குழுவினர் இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார்.

கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை எனவேதான் இது மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காணாமல் போன மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்கும் இந்த தேடலில் கடல் அடித் தரை பற்றிய அரிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தியப் பெருங்கடலில் 2000 மீட்டர்கள் உயரமுள்ள எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Check Also

குவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….

மத்திய கிழ‌க்கு நாடான குவைத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *