காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று புது தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

* 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை 3 வருடங்களில் எட்ட சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்

* இந்தியர்கள் அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமையாக்கப்படும்

* இந்தியர்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க நாடாளுமன்றத்தில் சட்டம்

* தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு

* ஊழல் ஒழிக்கப்படும்

* விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்

* மகளிருக்கு அதிகாரம் அளிக்கப்படும்

* பெண்களுக்கு போலீஸில் 25% இட ஒதுக்கீடு

* முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும்

* 5 வருடங்களில் பத்து கோடி புதிய வேலை வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* 60 லட்சம் வேலை வாய்ப்புகள், சுகாதாரத் துறையில் உருவாக்கப்படும்

*  அனைத்து பெரிய நகரங்களும் அதி விரைவு இரயிலால் இணைக்கப்படும்

* மீன் துறைக்கு தனி மந்திரி

* விவசாயிகளுக்கு குறைந்த வட்டி

* விளையாட்டை மேம்படுத்த தேசிய விளையாட்டு மற்றும் கல்வி பல்கலைகழகம் ஏற்படுத்தப்படும்

* அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Check Also

இளங்கோவனுக்கு ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது : உயர்நீதிமன்றம்

இளங்கோவனின் முன் ஜாமினுக்கான நிபந்தனைகளை தளர்த்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *