காவல் துறை அதிகாரிகள் இடம் மாற்றத்தை ஏற்க மறுக்கும் மம்தா? தேர்தல் ரத்தாக வாய்ப்பு?

மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் 5 காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணயம் இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ஏற்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தேர்தல் ஆணையம் எப்படி காவல் துறை அதிகாரிகளை மாற்ற முடியும்  என்று கேள்வி எழுப்பியுள்ளார். நான் யாரையும் இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது, இதனால் சட்டம் ஒழுங்கு கெட வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணி வரை கெடு விதித்துள்ள தேர்தல் ஆணையம், தேவைப்பட்டால், மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவை ரத்து செய்யவும் தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளது.

Check Also

️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…

ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் …

Leave a Reply

Your email address will not be published.