தூய்மை இந்தியா திட்டத்துக்கு சிறப்பான விழிப்புணர்வு கொடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை அடுத்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு தேநீர் விருந்தளித்தார் பிரதமர் மோடி.
நிகழ்ச்சியில் பேசிய மோடி,
பத்திரிக்கையாளர்களுடன் உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊடகங்களில் இருந்தும் தாம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றினார்.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு சிறப்பான முறையில் பத்திரிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன என்று பாராட்டினார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி