தமிழகத்தில் மக்களவைக்கு சரியாக 73.67%, ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% வாக்குப்பதிவு:தேர்தல் கமிஷன்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 73.67 சதவீதம் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% ஓட்டு பதிவாகி உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களின் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தொகுதிவாரியாக பதிவான ஓட்டுக்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

எண் தொகுதியின் பெயர் வாக்குப்பதிவு %
1  திருவள்ளூர் (தனி)  73.73
2  வட சென்னை  63.95
3  தென் சென்னை  60.4
4  மத்திய சென்னை  61.49
5  ஸ்ரீபெரும்புதூர்  66.21
6  காஞ்சிபுரம் (தனி)  75.91
7  அரக்கோணம்  77.8
8  வேலூர்  74.58
9  கிருஷ்ணகிரி  77.68
10  தருமபுரி  81.07
11  திருவவண்ணாமலை  78.8
12  ஆரணி  80
13  விழுப்புரம் (தனி)  76.9
14  கள்ளக்குறிச்சி  78.26
15  சேலம்  76.73
16  நாமக்கல்  79.64
17  ஈரோடு  76.07
18  திருப்பூர்  76.22
19  நீலகிரி (தனி)  73.43
20  கோயம்புத்தூர்  68.28
21  பொள்ளாச்சி  73.11
22  திண்டுக்கல்  77.36
23  கரூர்  80.55
24  திருச்சிராப்பள்ளி  70.55
25  பெரம்பலூர்  80.02
26  கடலூர்  78.63
27  சிதம்பரம் (தனி)  79.61
28  மயிலாடுதுறை  75.87
29  நாகப்பட்டினம் (தனி)  77.64
30  தஞ்சாவூர்  75.49
31  சிவகங்கை  72.83
32  மதுரை  67.88
33  தேனி  75.02
34  விருதுநகர்  74.96
35  இராமநாதபுரம்  68.63
36  தூத்துக்குடி  69.92
37  தென்காசி (தனி)  73.6
38  திருநெல்வேலி  67.68
39  கன்னியாகுமரி  67.69
 மொத்தம்  73.67

ஆலந்தூர் இடைத்தேர்தல் – 64.47% 

மொத்தம் பதிவான ஓட்டுக்கள் 73.67 சதவீதம். 

ஆண்கள் 73.49 சதவீதமும்,

பெண்கள் 73.85 சதவீதமும்,

மற்றவர்கள் 12.72 சதவீதம்

என்ற அளவில் ஓட்டளித்துள்ளனர் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *