தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து: இலங்கை

போதை பொருள் கடத்தியதாகக் கூறி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை எம்.பி. செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டதன் பேரில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஹெராயின் எனப்படும் போதைப் பொருளை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்திச் சென்றதாக கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கில், 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக மீனவர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சித் தலைவர்களும் பிரதமருக்கு கோரிக்கைகளை வைத்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டதன் பேரில், 5 மீனவர்களின் தூக்கு தண்டனையும் ரத்து செய்யப்படுவதாக இலங்கை எம்.பி. செந்தில் தொண்டைமான் கூறியுள்ளார்.

Check Also

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி …

Leave a Reply

Your email address will not be published.