காசிமேட்டில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை

‌மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் இனி வரும் நாட்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவுள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் எந்தந்த வகையில் பாதுகாப்புடன், நோய்த் தொற்று வராத வகையில் பொதுமக்களுக்கும் பாதிப்பு வராத வண்ணம் செயல்பட வேண்டும் என்பதை மீனவ பிரதிநிதிகளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை வழங்கினார்கள்.

சமூக இடைவெளியுடன், முககவசம் கட்டாயம் அணிவது, திரளாக கூட்டத்தினை சேர்க்காமல் தங்களது வியாபாரத்தினை தொடருவதற்காக வழி முறைகள் எடுத்துரைக்கப்பட்டது.

செய்தியாக்கம்&படங்கள்
” கிங்மேக்கர்” ‌B.செல்வம்

Check Also

PPFA மாநில பொதுச்செயலாளர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், ஊரடங்கால் பசியால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவு 14 ஆம் …