Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/kmaafxvc/geniustv.in/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

தேவயானி நிர்வாண சோதனை வீடியோ போலியானது : அமெரிக்கா உறுதி

அமெரிக்கா, நியுயார்க்கில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானியின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ போலியானது என்று அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்காவில் விசா மோசடி குற்றச்சாட்டுக்காக இந்திய துணைத் தூதர் தேவயானி கோபர்கடேவை போலீசார் நடுரோட்டில் கைது செய்து, கை விலங்கிட்டு அழைத்து சென்றனர்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை அதிரடியாக பறித்து பதிலடி கொடுத்தது. இதனால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக சற்று பணிந்த அமெரிக்க அரசு, தேவயானி மீதான வழக்கை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்தபோது அவருடைய ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிகள், சில இணையதளங்களில் நேற்று வெளியானது. அதில், ஒரு பெண்ணை தரையில் படுக்க வைத்து, அவருடைய ஆடை களை போலீசார் அவிழ்ப்பதும், அப்போது அந்த பெண் கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் மேரி ஹார்ப் அளித்த பேட்டியில், இந்த வீடியோ காட்சி போலியானது, ‘‘இந்தியாவுடனான உறவை பலப்படுத்தும் நடவடி க்கைக்கு அமெரிக்க அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இருநாட்டு உறவில் சமீப காலமாக சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது உண்மைதான். ஆனால், அது தற்காலிகமானது என்று அமெரிக்க அரசு உறுதியாக நம்புகிறது.

தேவயானியின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி சோதனையிடுவது போன்ற வீடியோ வெளியாகி இருப்பதை கேள்விப்பட்டோம். அது போலி என்பதை உறுதியாக கூறுகிறோம். அதில் இருக்கும் பெண் தேவயானி அல்ல. அமெரிக்க போலீசார் சோதனை செய்வதில் குறிப்பிட்ட பாணி நடைமுறையில் உள்ளது. அதுபோன்ற நடைமுறை எதுவும் இந்த வீடியோ காட்சியில் இல்லை. எனவே, அது போலி என்பது உறுதியாகிறது’’ என்றார். இருந்தாலும் இந்த வீடியோவால் நாடு முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71