பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

பழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 85.

தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் பிரபலமடைந்த இவர், ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இலட்சிய நடிகர் என்று அவர் பிரபலமாக அறியப்பட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தமிழக அரசியலில் இருந்து செயல்பட்டார்.

பின்பு அரசியலிருந்து ஓய்வுபெற்ற அவர், திரையரங்கு, படப்பிடிப்பு ஸ்டூடியோ மற்றும் ஒலிப்பதிவு தியேட்டர் ஆகியவற்றை நிறுவி நிர்வாகித்து வந்தார்.

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று காலை உயிரிழந்தார்.

அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இவரது மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *