மலேசியன் ஏர்லைன்ஸ் – சிக்னல் வந்த இடத்துக்கு கப்பல்கள் மற்றும் விமானங்கள் திசைதிருப்பம்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்க்கான தேடுதல் பணிகளை வழிநடத்துக்கின்ற ஆஸ்திரேலிய அதிகாரிகள், சீனக் கப்பல் ஒன்று இரண்டு முறை சிக்னல் ஒலியைக் கேட்டிருந்த இடத்துக்கு தேடுதலில் ஈடுபட்டுள்ள கப்பல்களையும் விமானங்களையும் திசைதிருப்பியுள்ளதாக கூறுகின்றனர்.

அந்த சீனக் கப்பலில் இருந்த கருவிகளைக் காட்டிலும் நவீன கருவிகள் தற்போது செல்லக்கூடிய கப்பல்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

சீனர்கள் சிக்னலைக் கேட்க முடிந்திருப்பது ஒரு முக்கியமான மற்றும் ஊக்கம் தருகிற விஷயம் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஆனாலும் இந்த சிக்னல் காணாமல்போன விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்துதான் வந்ததா என தற்போதைக்கு சொல்லவதற்கில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளையில் பெர்த் நகருக்கு மேற்கிலுள்ள வேறொரு கடற்பரப்பில் தண்ணீருக்கடியில் இருந்து மூன்றாவதாக வேறொரு ஒலிச் சமிக்ஞையைக் கேட்டதாக ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று கூறுகிறது.

விமானத்துடைய கருப்பு பெட்டியின் மின் கலன்கள் விரைவில் தீர்ந்துவிடும் என்பதால் அதனை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *