மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத் தேடுதல் வேட்டை: பல புதிய பொருட்களை சீன விமானம் கண்டது

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீன விமானம் ஒன்று இந்திய பெருங்கடலில் பல அடையாளம் தெரியாத பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், அது காணாமல் போயிருக்கலாம் என்று கருதப்படும் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில், இந்த சதுர வடிவ வெள்ளை பொருட்கள் மிதந்ததாக செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

இந்தப் பொருட்களை சோதனை செய்ய ஒரு சீன ஐஸ் உடைக்கும் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட எழுபதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் மேற்கொள்ளப்படும் இன்றைய தேடுதல் நடவடிக்கைகளில் பத்து விமானங்கள் பங்கு கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published.