காணாமல் போன மலேசிய விமானம் MH-370ஐத் தேடும் பணி இன்னும் ஓயவில்லை, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தொலைதூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு விமானங்கள் விமான பாகங்களைத் தேடிவருகின்றனர்.
இந்த விமாத்தின் பாகம் எதுவும் மிதப்பதைக் கண்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் தற்போது தேடப்படும் பகுதியில் சில பொருட்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் காட்டுவதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விமானத்திலிருந்து வந்திருக்க கூடிய, சாத்தியமுள்ள சில பொருட்கள் கடலில் மிதப்பதை சீன மற்றும் ஆஸ்திரேலிய செயற்கைக்கோள்கள் எடுத்த படங்கள் காட்டுவதாக ஏற்கனவே தெரியவந்திருந்தது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி