ரஜினிக்கு சல்மான் கான் சவால்!

இந்திய பிரதமர் மோடி துவங்கி வைத்த ’தூய்மையான இந்தியா’ போட்டி நாடெங்கும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு போட்டியாளர் குப்பைகள் நிறைந்த பகுதியை சுத்தப்படுத்திவிட்டு, அடுத்த நபரை போட்டிக்கு அழைத்து சவால் விடவேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாகும்.

இதன் அடிப்படையில் நரேந்திர மோடி, சல்மான் கான் உள்ளிட்ட பலரையும் போட்டிக்கு அழைத்தார். போட்டியை ஏற்றுக்கொண்ட சல்மான் கான் குப்பையாக கிடந்த பகுதிகளை சுத்தம் செய்து, சில வீடுகளுக்கு வெள்ளையும் அடித்தார்.

தற்போது ரஜினிகாந்த், ஆமிர் கான், ஆசிம் பிரேம்ஜி, சந்தா கோச்சர், ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பலரையும் போட்டிக்கு அழைத்து சவால் விட்டிருக்கிறார். சல்மான் கானின் சவாலை ஏற்று ரஜினி தெருவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்

Check Also

இந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, …

Leave a Reply

Your email address will not be published.