வாக்காளர் பட்டியலில் குளறுபடி: தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.

அந்த புகார் மனுவில், வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவரின் புகைப்படம் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டால் அவர்கள் மூலம் கள்ள ஓட்டுகள் பதிவாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

இது குறித்து திமுக சார்பில் வருவாய்த் துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. .

எனவே, உடனடியாக வரைவு வாக்காளர் பட்டியலை சரி செய்து அதில் உள்ள குளறுபடிகளை நீக்கம்படி கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை யில் திமுக MLA ஆஸ்டின் தலைமையில் சாலை மறியல்!

மாநில நெடுஞ்சாலைகளில், குடிநீர் திட்டங்களுக்காக குழாய் பதிக்கிறோம் என்ற பெயரில் 2 ஆண்டுகளாக மரணக்குழிகளை ஏற்படுத்தி இன்று வரை சரிசெய்யாமல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *