தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்க 469 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்க இணை இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் ஆதார் அட்டை வழங்க 50 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார்.
வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்ட தலைமையகங்களில் ஆதார் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர மையங்கள் அரசு அலுவல் நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 5 வயதுக்கு மேற்பட்ட 4.71 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். சென்னை மாவட்டத்தில் தான் ஆதார் எண் மிகக் குறைவான நபர்களுக்கு அதாவது 23 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.